தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை டவுன் பிள்ளையார் கோவில் தெருவிலிருந்து தலைமை அஞ்சல் நிலையத்திற்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வேகத்தடை இல்லை. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன. இதன்காரணமாக அந்த பகுதியின் வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கவைிடுத்துள்ளனர்.