பெங்களூரு பேகூர் நாயப்பனஹள்ளி சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையிலும், சாலையோரமும் பல இடங்களில் பள்ளம் விழுந்துள்ளது. தற்போது பெய்து வரும் மழையால் பள்ளங்களில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இரவில் வேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளங்களில் வாகனங்களை இறக்கும்போது கீழே தவறி விழவும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் வகையில் சாலை பள்ளம் உடனடியாக மூடப்படுமா?.