திருப்பூர் லட்சுமி நகர் பகுதியிலிருந்து நாராயணசாமி நகர் செல்லும் வழியில் ரோட்டின் நடுவே கழிவு நீர் கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயின் மேல் அமைக்கப்பட்டுள்ள சிறிய பாலமானது சேதமடைந்துள்ளது. இதனால் பாலத்தில் உள்ள கான்கிரீட்டுகள் உடைந்து பெரிய ஓட்டை ஏற்பட்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் இந்த ரோட்டில் வாகனங்களை ஓட்டி செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் இவ்வழியாக செல்லும் போது ஓட்டை உள்ள இடத்தில் வாகனத்தின் சக்கரங்கள் சிக்கி விபத்திற்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே விபத்து ஏற்படுத்த காத்திருக்கும் இந்த கால்வாய்க்கு கான்கிரீட் தளம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா?.