வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-07-15 15:28 GMT

திருப்பூர் காங்கேயம் ரோடு மணியகாரம்பாளையத்தில் இருந்து காசிபாளையத்திற்கு செல்லும் ரோடானது சரியான முறையில் பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த ரோட்டில் ஆங்காங்கே பெரிய குழிகள் இருப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துடன் வாகனங்களை ஓட்டி செல்கின்றனர். சில இடங்களில் ரோட்டில் பெரிய குழிகள் உள்ளன. இதனால் இந்த ரோட்டில் அவ்வப்போது விபத்து ஏற்பட்டு வருகிறது. இதேபோல், குண்டும், குழியுமாக உள்ள ேராட்டில் தொடர்ச்சியாக செல்பவர்களின் வாகனங்கள் விரைவில் நாசமடைகின்றன. இந்த வழியாக தினமும் அதிக அளவிலான வாகனங்கள் வந்து சென்றவண்ணம் இருப்பதால் ரோட்டில் இருக்கும் குழி நாளுக்கு நாள் பெரிதாகி வருகிறது. எனவே இந்த ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்