குண்டும், குழியுமான சாலை

Update: 2022-10-02 17:06 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தடத்தரை கிராமத்தில் தார்சாலை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஜல்லிக்கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். குண்டும் குழியுமான சாலையை, சீரமைத்து புதிய தார் சாலை அமைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சதீஷ், தடத்தரை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்