வல்லம் பேருராட்சி மின் நகரில் திருவள்ளுவர் தெருவில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் போதிய சாலை வசதியில்லை. இதனால் அந்த பகுதியில வசிக்கும் மக்கள் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாக்கடை வசதியில்லாததால் கழிவுநீர் தெருக்களில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.