தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி வளையபேட்டையை அடுத்த மேலசத்திரம் புதுதெரு சாலை பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள்நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?