நாமக்கல் டவுன் சுண்ணாம்புகாரர் தெரு, வெள்ளி வாரி தெரு மற்றும் மேட்டு தெரு பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சாலைகளில் பள்ளம் இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை விரைவாக சீரமைப்பார்களா?
-செல்வம், நாமக்கல்.