விபத்து அபாயம்

Update: 2022-09-30 16:14 GMT
நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பு பகுதி எப்போது வாகன போக்குவரத்துடன் பரபரப்பாக காணப்படும். இந்த சந்திப்பில் கடந்த சில நாட்களுக்கு முன் குழாய் பதிப்பதற்காக பள்ளம் தோட்டப்பட்டு பணிகள் நடந்து முடிந்தது. ஆனால், அந்த பகுதியில் தார்சாலை அமைக்கப்படாமல் மணலுடன் ஜல்லிகள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால், இரவு நேரம் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராசிக், கோட்டார்

மேலும் செய்திகள்