சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம், குதிரைசந்தல் கிராமத்திலிருந்து தொட்டியம் கிராமத்தை இணைக்கும் சாலை மற்றும் மடத்துக்காடு பஸ் நிறுத்தத்தை இணைக்கும் சாலை பலத்த சேதம் அடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மேலும் குதிரைச்சந்தல் கிராமத்தை ஒட்டி உள்ள பள்ளத்தில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.