ஓசூர் அருகே உள்ள நாகொண்டப்பள்ளி ஏரியின் கரையோரம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. ஓசூர்- தேன்கனிக்கோட்டையின் பிரதான சாலை என்பதால் வாகனங்கள் அதிகம் செல்கின்றன. மேலும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?
-மஞ்சுளா, ஓசூர்.