கிருஷ்ணகிரி கோ-ஆப் காலனி 3-வது கிராசில் உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இந்த பகுதியில் பள்ளிகள், ஆஸ்பத்திரிகள் அதிகம் உள்ளன. இதனால் எந்தநேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
-வினோத், கிருஷ்ணகிரி