நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் இருந்து கல்யாணி செல்லும் சாலையில் நொச்சிப்பட்டி என்ற பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த சாலை வழியாக தினந்தோறும் செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். சேதமடைந்த சாலையால் இரவு நேரத்தில் விபத்து அபாயமும் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன்கருதி நொச்சிப்பட்டி பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-துரைசாமி, புதுச்சத்திரம், நாமக்கல்.