சாலையோர ஆக்கிரமிப்புகள்

Update: 2022-09-26 16:01 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் சாலையின் இருபுறமும் கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் சாலையை ஆக்கிரமித்துள்ளதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. மேலும் கொங்கணப்பள்ளி சாலையிலும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பும் சாலை ஓரத்தில் ஆக்கிரமித்துள்ள கடைகளால் அப்பகுதியில் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்து போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தாஸ், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்