வேகத்தடை அவசியம்

Update: 2022-09-25 16:51 GMT

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் இருந்து பரமத்திவேலூர் செல்லும் சாலையில் உள்ள வார சந்தை அருகே வாங்கல் ரோடு பிரிந்து செல்கிறது. இந்த பகுதியில் 3 ரோடும் இணையும் பகுதியில் மையப்பகுதியில் ரவுண்டானா போல் இரும்பு கம்பியை வைத்து உள்ளனர். ஆனால் எந்தப் பகுதியிலும் வேகத்தடை இல்லாததால் 3 சாலைகளில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் பலமுறை விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே விபத்துகள் தடுக்கும் வகையில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சந்திரபாபு, மோகனூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்