தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதி நாச்சியார்கோவிலை அடுத்த திருநரையூர் அன்வர்நகரில் முறையான சாலை வசதி இல்லை. இதனால் பொதுமக்கள் மண்பாதையை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலங்களில் மண்பாதை சேறும்,சகதியுமாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் மண்பாதையில் தற்போது உடைக்கப்பட்ட கற்கள், செங்கல் துண்டுகள் கொட்டப்பட்டுள்ளன. இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?