மதுரை மாவட்டம் அவனியாபுரத்திலிருந்து முத்துப்பட்டி செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் பயணிப்பவர்கள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துக்களை சந்தித்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.