கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் இருந்து வேப்பனப்பள்ளி செல்லும் சாலையில் பல இடங்களில் வேகத்தடைகள் உள்ளன. விபத்துகளை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த வேகத்தடைகள் அமைக்கப்பட்டன. ஆனால் இந்த வேகத்தடைகளே தற்போது விபத்துகளுக்கு காரணமாகி வருகின்றன. வேகத்தடைகள் மேல் வர்ணம் பூசப்படாததால் வாகன ஓட்டிகள் பலரும் வேகமாக வந்து விபத்தில் சிக்குகிறார்கள். எனவே அந்தப் பகுதியில் வேகத்தடைகள் இருப்பதை குறிக்கும் வகையில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். மேலும் வேகத்தடைகள் மீது வெள்ளை நிற வர்ணம் பூசி வாகன ஓட்டிகளுக்கு தெரியும் வகையில் இருக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.