தடுப்புச்சுவரால் விபத்து

Update: 2022-07-14 11:25 GMT
நாமக்கல்லில் இருந்து திருச்செங்கோடு செல்லும் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகம். ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் ஆகியவை உள்ளன. அங்கு சாலையின் நடுவே அமைக்கப்பட்டு இருக்கும் தடுப்பு சுவரின் உயரம் அதிகமாக உள்ளது. அதனால் கலெக்டர் அலுவலகம் மற்றும் கோர்ட்டு வளாகத்தில் இருந்து எதிர் திசை சாலையின் ஓரத்தில் உள்ள கடைகளுக்கு செல்பவர்கள் சாலையை கடக்கும் போது, அந்த வழியாக வரும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. அதன் காரணமாக சாலையைக் கடப்பவர்கள் வாகனங்கள் மோதி விபத்தில் சிக்கி காயம் அடைகின்றனர். எனவே அங்கு தடுப்புச்சுவரின் உயரத்தை குறைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்