தெருவின் பெயரை மாற்றுதல்

Update: 2022-09-22 14:40 GMT
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டலம் 09 வார்டு 119 பகுதியில் கொலைகாரன் பேட்டை என்ற பெயரில் தெருக்கள் உள்ளன இப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்கின்றன.. இப்பகுதி மக்கள் தங்கள் விலாசத்தினை வேலைக்குச் செல்லும் நேர்காணலிலும் , கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மற்றும் திருமணத்திற்காக மணப்பெண், தங்கள் விலாசத்தினை பதிவு செய்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர்... கொலைகாரன் பேட்டை என்று பதிவு செய்வது மிகவும் மன உளைச்சலை தருகின்றது.. எனவே கொலைகாரன் பேட்டை என்பதை தவிர்த்து இனிய தமிழ் பெயர் வைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது


மேலும் செய்திகள்