சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் விபத்து அபாயம்

Update: 2022-07-14 07:51 GMT
நாமக்கல் நகராட்சி சுண்ணாம்புகாரத்தெரு பிரிவு சாலையிலும், மஜித் தெருவில் இருந்து குட்டை தெருவுக்கு பிரியும் சாலையிலும்  கான்கிரீட் மூலம் தரைவழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்தநிலையில் குட்டைத்தெரு பிரிவில் இருந்து மஜித் தெரு பிரியும் இடத்தில் சாலையில் பெரிய பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்