கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் பாவக்கல் உயர்மட்ட மேம்பாலத்தில் இருந்து சிங்காரப்பேட்டை செல்லும் தார்சாலை தார் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அந்த சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாகவும், மண் சலையாகவும் மாறிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்தோடு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தார்சாலையை புதுப்பித்து தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சுப்பிரமணி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.