கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காட்டேரி ஊராட்சி அனுமந்தீர்த்தம் பிரிவு சாலையில் இருந்து லக்கம்பட்டிக்கு செல்லும் தார்சாலையில் தார் பெயர்ந்து காணப்படுகிறது. இந்த சாலையில் ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுவதால் இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். வாகனங்களும் அடிக்கடி பழதாகி பஞ்சர் ஆகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும்.
-கண்ணாயிரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.