வேகத்தடை வேண்டும்

Update: 2022-09-20 14:39 GMT


நாகை மாவட்டம் திருமருகலில் அரசு தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த சாலையில் வேகத்தடை இல்லாததால் அந்த வழியாக வாகனங்களில் வருபவர்கள் அதிவேகமாக சென்று வருகின்றனர். இதன் காரணமாக பொதுமக்கள்,மாணவ-மாணவிகள் சாலையைக் கடக்கும் போது விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும், குழந்தைகள், பெரியவர்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவ-மாணவிகளின் நலன் கருதி மேற்கண்ட பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுமக்கள், திருமருகல்

மேலும் செய்திகள்