நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டியில் மேம்பாலத்தின் அருகே இணைப்பு சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து அடிபடுகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.