'தினத்தந்தி'புகார் பெட்டி செய்தி எதிரொலி:
-----------------------------------------------------
உடைந்த சிமெண்டு தளம் சரி செய்யப்பட்டது
திருப்பூர் அவினாசி சாலை குமார்நகர் பகுதியில் குடிநீர் வினியோக நீர்த்தேக்க தொட்டி அமைந்துள்ள வளாகத்திற்கு முன்பாக உள்ள குடிநீர் திறப்பு வால்வை சுற்றி அமைந்துள்ள சிமெண்டு தளம், பெயர்ந்து போய் வாகனங்களுக்கு விபத்து ஏற்படுத்தும் விதமாக காணப்பட்டது . இதுகுறித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 'தினத்தந்தி' புகார் பெட்டி பகுதியில் படத்துடன் செய்தி வெளியான நிலையில், மறுநாளே அந்த குறைபாடு சரி செய்யப்பட்டு,பெயர்ந்திருந்த சிமெண்டு தளம் சிறந்த முறையில் போடப்பட்டுள்ளது.இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு, பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
மு.பாலதண்டாயுதம்,திருப்பூர்.
9994149922.