கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் இருந்து கிருஷ்ணகிரி மெயின்ரோட்டில் போடம்பட்டி பிரிவு பாதை வரை சுமார் 2 கி.மீ தூரம் தார்சாலை சேதமடைந்து ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். எனவே இந்த சாலையை சீரமைத்து புதிய தார்ச்சாலை அமைக்க வேண்டும்.
-கிஷோர், கிருஷ்ணகிரி.