திருவாரூரில் இருந்து விளமல் செல்லும் சாலையின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையின் வழியாக சென்று வருகின்றனர். இந்த சாலை தற்போது சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.