நாமக்கல் மாவட்டம் பாச்சலில் இருந்து ஏ.கே.சமுத்திரம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இரவு நேரங்களில் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் விபத்துகளில் சிக்குகின்றனர். எனவே பெரும் விபத்து ஏற்படுவதற்கு முன்பு இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சங்கர், நாமக்கல்.