மோசமான சாலைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-13 14:38 GMT


பெங்களூரு மைலசந்திரா பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளித்து வருகின்றன. மேலும் சாலைகள் பெயர்ந்து காணப்படுகின்றன. தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வரும் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சாலைகளில் ஒரே நேரத்தில் ஒரு வாகனம் சென்று வர முடிகிறது.

இதனால் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. மோசமான நிலையில் உள்ள சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக முன்வர வேண்டும்.


மேலும் செய்திகள்