பெங்களூரு எலனஹள்ளி ரோடு அக்ஷய் நகரில் உள்ள சாலையின் நடுவே பெரிய பள்ளம் விழுந்து உள்ளது. அந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. சாலை பள்ளத்தால் பகல் நேரத்தில் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இரவில் இருசக்கர வாகனங்களில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள் அந்த பள்ளத்தில் இருசக்கர வாகனத்தை இறக்கினால் விபத்தில் சிக்கி கொள்ளும் அபாயமும் உள்ளது. இதனால் உயிர்பலி ஏற்படுவதற்கு முன்பு அந்த சாலை பள்ளத்தை மூட மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.