சாலையோர பள்ளங்கள் மூடப்படுமா?

Update: 2022-09-16 14:19 GMT

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேம்பால இறக்கம் கிழக்கு பகுதியில் உள்ள சாலையோரத்தில் ஆங்காங்கே பள்ளங்கள் உள்ளன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அடிக்கடி கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் விபத்துகள் அதிகளவில் நடக்கிறது. இதன்காரணமாக அந்த வழியாக வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையோரத்தில் உள்ள பள்ளங்களை மூட நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்