நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் உள்ள மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் அந்த பகுதி இருளில் மூழ்கி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பஸ்களுக்காக காத்திருக்கும் பயணிகள் அச்சப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளும் இரவில் வெளிச்சம் இல்லாததால் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே மேம்பாலத்தின் கீழ் மின்விளக்குகளை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-முரளி, நாமக்கல்.