குண்டும், குழியுமான சாலை

Update: 2022-09-15 16:36 GMT

ஓசூர் பேரண்டப்பள்ளி பகுதியில் 4 சக்கர வாகன ஷோரூம்கள் நிறைந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவும், தேசிய நெடுஞ்சாலை அருகே இருப்பதாலும் இப்பகுதியில் வாகன போக்குவரத்தும், டிப்பர் லாரிகளின் போக்குவரத்தும் அதிகளவில் உள்ளன. இந்தநிலையில் இங்குள்ள சர்வீஸ் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-ஆனந்தன், ஓசூர்.

மேலும் செய்திகள்