திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் தாலுகா, எட கீழையூர் கிராமத்தில் வடக்கு உடையார்தெருவில் வெட்டிக்காடு, மூவாநல்லூர் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலை பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது இந்த சாலை சேதமடைந்து மண் சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் சேறும், சகதியுமாக காட்சி அளிக்கிறது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமத்து தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.