நாமக்கல் மாவட்டம் பரமத்தி ரோடு போதுப்பட்டியில் இருந்து கொங்கு நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமாக காணப்படுகிறது. 20 ஆண்டுகள் ஆகியும் அந்த பகுதிக்கு செல்லும் சாலையை புதுப்பிக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் நடவடிக்கை சாலையை புதுப்பிக்க முன் வரவேண்டும்.
-சத்தியமூர்த்தி, போதுப்பட்டி, நாமக்கல்.