தேனி மாவட்டம் கூடலூர் அருகே லோயர்கேம்ப்-குமுளி மலைச்சாலையில் சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சாலையில் மண் சரிந்து விழுந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. விபத்து அபாயமும் இதனால் உள்ளது. எனவே சாலையில் கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.