சேலம் மாவட்டத்தில் தம்மம்பட்டியில் இருந்து செந்தாரப்பட்டி சாலையில் தினமும் பள்ளி வாகனம் மட்டும் சுமார் 30 வாகனத்திற்கும் மேல் வருகிறது. பயணிகள் பஸ் 15 நிமிடத்திற்கு ஒரு பஸ் வருகிறது. அருகில் அரசு பணிமனையும் உள்ளது. தற்பொழுது சுமார் 4 கி.மீ. தூரம் இந்த சாலையை அகலப்படுத்தி உள்ளனர். ஏரிகரை ஓரத்தில் 1 கி.மீ. தூரம் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. எனவே விபத்துகளை தடுக்க இந்த 1 கி.மீ. தூரத்தையும் அகலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.