கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா சின்னமட்டாரப்பள்ளி ஊராட்சி பசவண்ண கோவில் அருகில் இருந்து ஓதி குப்பம், மேடுகம்பள்ளி வழியாக மேல்கோட்டாய் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் சிலநேரங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரகுபதி, கிருஷ்ணகிரி.