சேறும்,சகதியுமான பாதை
திருப்பூர் கோவில்வழியை அடுத்துள்ள 60-வது வார்டுக்குட்பட்ட பெருமனை கிறிஸ்தவ காலனியில் உள்ள சுகாதார வளாகத்திற்கு செல்லகழிவறைக்கு சரியான சாலை வசதி இல்லை. மழைநீரால் சேறும் சகதியுமாக இருக்கிறது. பொது மக்கள் செல்லமுடியாமலும் கழிப்பிடத்தை பயன்படுத்த வழியில்லாமலும் கிடக்கின்றது.இதுகுறித்து வார்டு கவுன்சிலரிடம் பல முறை கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, எந்த அதிகாரிகளும் இதுவரை கண்டுகொள்ளவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாதையை சரி செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஜெர்ரி,கோவில்வழி.
9789775281