கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் நாகம்பட்டி கூட்டுரோடு முதல் ஊத்தங்கரை வரை சாலையின் இரு புறமும் கழிவு நீர் கால்வாய் மற்றும் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதால் மரப்பலகைகளை வைத்து கடைகளுக்கு வணிகர்கள், பொதுமக்கள் சென்று வருகின்றனர். எனவே சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-சக்திவேல், கிருஷ்ணகிரி.