கள்ளக்குறிச்சி குளத்துமேட்டு தெருவில் சாலை பலத்த சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. சாலையில் உள்ள பள்ளத்தில் அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர். இது குறித்து புகார் அளித்தும் சாலையை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க சாலையை சீரமைக்க வேண்டியது அவசியமாகும்.