கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தடத்தரை கிராமத்திற்கு செல்லும் சாலை அமைத்து பல வருடங்கள் ஆகிறது. இதனால் சுமார் 1 கி.மீ. தூரம் தார் சாலை சேதமடைந்து ஜல்லிகற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து அடிபடும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைத்து புதிதாக தார் சாலை அமைக்க வேண்டும்.
-சதீஷ், தடத்தரை, கிருஷ்ணகிரி.