விபத்து அபாயம்

Update: 2022-09-11 13:36 GMT

நாகர்கோவில் கோட்டார் சவேரியார் சந்திப்பில் இருந்து செட்டிகுளத்துக்கு புதிய தார்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் பல இடங்களில் பாதாள சாக்கடை குழாயின் மூடி அமைக்கப்பட்டுள்ள பகுதி சாலை மட்டத்தை வீட உயரமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த பகுதிகளில் சாலையின் மட்டத்தை சீர்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றோ டெகோசிங் ராஜன், வேதநகர்.

மேலும் செய்திகள்