நாகர்கோவில் மாநகராட்சிக்கு வலம்புறிவிளை குப்பை கிடங்கிற்கு எதிரே ஈத்தாமொழி சாலைக்கு செல்லும் குறுக்கு சாலை உள்ளது. இந்த சாலையின் தொக்கத்தில் கழிவுநீர் ஓடை பாலத்துக்கும் சாலைக்கும் இடையே போடப்பட்டிருந்த கான்கிரீட் தளம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக ெசல்லும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, வாகன ஓட்டிகள் நலன் கருதி சேதமடைந்த பகுதியை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சூர்யா, புதூர்.