குண்டும் குழியுமான சாலை

Update: 2022-09-09 16:30 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டைைய அடுத்த திம்ஜேப்பள்ளியில் இருந்து செங்காடு குட்டூர் வரை சுமார் 2 கி.மீ தூரம் உள்ள தார்சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்க்கு உள்ளாகிறார்கள். இந்த தார்சாலை தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தின் மையப்பகுதியில் இருக்கிறது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-கிருஷ்ணமூர்த்தி, எடவனஅள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்