ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் பத்தலபள்ளி அருகே த.கசுவகட்டா பகுதிக்கு செல்லும் சாலை சேதமடைந்து சாலையின் நடுவே மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த பகுதியில் குடியிருப்பு பகுதிகளும், தனியார் பள்ளிகளும், கடைகளும் உள்ளன. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சங்கர், ஓசூர், கிருஷ்ணகிரி.