சீரமைத்து பல ஆண்டுகளாகும் சாலை

Update: 2022-09-09 13:09 GMT

கூத்தாநல்லூர் தாலுக்கா, மரக்கடையில் இருந்து அதங்குடி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் வழியாக தான் கூத்தாநல்லூர், மன்னார்குடி, திருவாரூர், கொரடாச்சேரி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உள்ள ஊர்களுக்கு அதங்குடி பகுதி மக்கள், பள்ளி மாணவர்கள் சென்று வர வேண்டும். இந்த சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் இந்த சாலையில் செல்ல கடும் சிரமப்பட்டு செல்கின்றனர்.எனவே சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்