தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் உள்ள பழைய திருவையாறு சாலையோரத்தில் உள்ள மழைநீர் வடிகால் பராமரிப்பின்றி உள்ளது. இதனால் மழைநீர் வடிகால் வழியாக செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை சீர்செய்வதற்காக சாலை நடுவே பள்ளம் தோண்டப்பட்டது. அந்த பள்ளம் முறையாக மூடப்படாமல் உள்ளதால் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?