சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-09-08 17:02 GMT

சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நாமக்கல் அருகே முதலைப்பட்டியில் மேம்பாலம் உள்ளது. அங்கிருந்து நகருக்குள் செல்லும் பிரதான சாலை உள்ளது. இந்த இணைப்பு சாலை தொடங்கும் இடத்தில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. அதனால் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழும் சூழல் உள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சங்கர், நாமக்கல்.

மேலும் செய்திகள்